கம்பீரை தொடர்ந்து அரசியலில் குதிக்க காத்திருக்கும் இர்பான் பதான்!

Spread the love

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதான் அரசியலில் களமிறங்க ஆர்மாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

சமீபத்தில் பாஜக-வில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுத்தம் கம்பீர், டெல்லி கிழக்கு தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறார். அரசியலில் குதித்த சில தினங்களிலேயே மக்களை தொகுதிகான சீட்டை பிடித்த கம்பீரை போல் அவரது இணை வீரர் இர்பான் பதான் தற்போது அரசியலில் கால்பதிக்க காத்திருப்பதாக தெரிகிறது.

வதோதராவில் தனது வாக்கினை பதிவு செய்த இர்பான் பதான், பின்னர் செய்தியாளர்களிடம் தான் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கட் அணியில் இடம்பெற்று நாட்டிற்கு முடிந்தவற்றை செய்த தான் காலம் வேண்டினால் தொடர்ந்து மக்கள் சேவையில் தொடர தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Work ✅. Travel ✅. VOTING ✅

A post shared by Irfan Pathan (@irfanpathan_official) on

மேலும் தனது இணை ஆட்டக்காரர் கவுத்தம் கம்பீரின் அரசியல் பிரவேசதிதற்கு தனது வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து தான் வாக்களித்ததன் அடையாளமாக புகைப்படம் ஒன்றினையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிழக்கு டெல்லி தொகிதியில் இருந்து போட்டியிடும் கவுத்தம் கம்பீர், தனது தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் மற்றும் ஆம் ஆத்மி வேட்பாளர் அத்திஷி ஆகியோரை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள கவுத்தம் கம்பீர்., கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு பிரதமர் செய்து வரும் சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்முறை அமையவிருக்கும் ஆட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பாஜக-வில் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *