ஒரு நாளைக்கு சுமார் 52 நிமிடம் மக்கள் புறணி பேசுவதாக ஆய்வில் தகவல்!

Spread the love

ஒரு நாளைக்கு 16 மணி நேர வழக்கமான பணிகளில் 52 நிமிடங்கள் மக்கள் புறணி பேசுவதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் இயல்பாக இருக்கும் குணங்களின் ஒன்று புறணி பேசுதால். அதுவும், ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுவதும் உண்டு. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இளம் வயதினர் தங்களுடன் வேலை செய்யும் வயதான சக ஊழியர் குறித்து அதிகமாகப் புறணி பேசுவதாகக் கூறியுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 467 பேர் பங்கு பெற்றுள்ளனர். அதில் 269 பேர் பெண்களும், 198 பேர் ஆண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் உள்ளார்ந்த சிந்தனைகள் கொண்ட, வெடுக்கென பேசாத, உதவி செய்யாத மக்களைக் காட்டிலும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்கள்தான் அதிகமாகப் புறணி பேசுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள்தான் அதிக நேரம் புறணி பேசுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது ஒரே நடுநிலையில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். ஆய்வில் 16 மணி நேரத்தில் 52 நிமிடங்கள் புறணி பேசுகின்றனர். அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை புறணிகள் சரி சமமாக இருக்கின்றன. புறணி என்பது பிரபலங்களைக் காட்டிலும் தங்களுக்கு அதிகம் பரிச்சயமானவர்களைப் பற்றியே பேசுகின்றனர்.

அதேசமயம் குறைவான கல்வி அறிவு கொண்ட மக்களைக் காட்டிலும் நன்கு படித்த மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே அதிகமாகப் புறணி பேசுவதாகக் கூறுகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *