தென்னப்பிரிக்கா அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளிய வங்கதேசம்!

Spread the love

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி தென்னாப்பிரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 5-வது லீக் ஆட்டம் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஷகிப் உல் ஹாசன் 75(84) மற்றும் முஷாபிர் ரஹீம் 78(80) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ், ஆண்ட்லி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. அணி வீரர்கள் நிதானமாக விளையாடி வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அணியில் அதிகப்பட்சமாக டூப்ளஸிஸ் 62(53) ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இப்போட்டியில் கண்ட தோல்வி மூலம் உலக கோப்பை தொடரில் 2-வது தோல்வியை தென்னாப்பிரிக்கா பதிவு செய்துள்ளது. பெரும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் தென்னாப்பிரிக்கா இரண்டு தோல்வியை கண்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *