இந்திய ரசிகர்களை கண்டித்தாரா விராட் கோலி?, வைரலாகும் Video!

Spread the love

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி எதிரணி வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக நடந்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி பரபரப்பின் உச்சத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் வீரர்களின் ஆட்டத்தை காட்டிலும் சுவாரசியமாக அமைந்தது. 

இப்போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி 312 ரன்கள் குவித்து வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதற்கிடையில் விராட் கோலி பேட்டிங் செய்து வந்த போது, ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங் செய்ய பவுண்டரி எல்லை அருகே நிற்க வைக்கப்பட்டார். அப்போது ரசிகர்கள் சிலர் “சீட்டர், சீட்டர்” என கோஷம் போட்டு ஸ்டீவ் ஸ்மித்தை பந்து சேத விவகாரத்தை வைத்து ஏமாற்றுக்காரர் என கிண்டல் செய்தனர். 

ஆனால், அப்போது விராட் கோலி ரசிகர்களை கண்டிக்கும் வகையில், ஏன் ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்கிறீர்கள்? அதற்கு பதிலாக தனக்கு உற்சாகம் அளியுங்கள்” என முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சைகை செய்தார். ஸ்டீவ் ஸ்மித்தை போட்டிக்காரர் என பார்க்காமல், விராட் கோலி செய்த இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தும் கோலி செய்த செயலை பாராட்டி, ஏற்றுக் கொள்ளும் வகையில் அவர் முதுகில் தட்டிச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *