இலங்கையின் அரையிறுதி கனவிற்கு வழிவிடுமா மேற்கிந்திய தீவுகள்?

Spread the love

இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 39-வது லீக் ஆட்டம் செஸ்டர் -லி -ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது, இப்போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி முறையே 6, 3 புள்ளிகளுடன் 7 மற்றும் 9-வது இடத்தில் இருக்கின்றன. இன்றைய போட்டியில் இலங்கை வெல்லும் பட்சத்தில் அடுத்து இந்தியாவிற்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. எனினும் இலங்கையில் இந்த கனவு பலிக்க நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைய வேண்டும். அதேப்போல் இலங்கை வெற்றிபெறும் இரண்டு போட்டிகளிலும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

மறுமுனையில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 7 புள்ளிகளை மட்டுமே பெறும் என்பதால் மேற்கிந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேறுவது என்பது நிகழாத ஒன்று.

இந்நிலையில் இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. எனவே கடும் பிராத்தணைகளுடன் இலங்கை ரசிகர்கள் இன்றைய போட்டியை கண்டு வருகின்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகின்றது. தற்போதைய நிலவரப்படி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பு ஏதும் இன்றி 43 ரன்கள் குவித்துள்ளது. கருணரத்ணே 19(29), குஷல் பெராரா 22(19) ரன்களுடன் களத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *