கும்கி பட நாயகியான லக்ஷ்மி மேனனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா :இவருக்கா இப்படி ரசிகர்கள் ஷாக்!

Spread the love

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார்.

வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார். 2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார்.

கும்கி திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. 2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வந்தார்.

அப்போது தான் ஆபாச பட விவகாரம் ஒன்றில் சிக்கினார். ஆனால், பிறகு தான் அந்த வீடியோவில் இருப்பது லக்ஷ்மி மேனனே இல்லை. அவரை போலவே இருக்கும் வட நாட்டை சேர்ந்த ஒரு நடிகை என்று. ஆனால், அந்த சர்ச்சைக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இறுதியாக ரெக்க என்ற திரைப்படத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடித்தார். அதன் பிறகு, படிப்பை தொடர்கிறேன் என்று சென்று விட்டார்.இப்போது, படிப்பை முடித்துள்ள அவர் தனது உடல் எடையையையும் கணிசமாக குறைத்துள்ளார்.

மேலும், பாரதநாட்டிய நிகழ்சிகளில் கலந்து கொண்டு மேடைகளில் பரதம் ஆடி வருகிறார். விரைவில் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், தற்போது அம்மணியின் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *