ஹாலிவுட் ஹீரோ சிம்பு ரிட்டன், இனிதான் ஆரம்பம் அதிரடி,

Spread the love

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வந்தா ராஜாவா தான் வருவேன். ஆனால் இந்த படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது.வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இப்படத்தை தொடர்ந்து சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. சிம்பு மாநாடு படத்தில் நடிப்பதற்கு பதிலாக மஃப்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க வந்துவிட்டார். இதன் காரணமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொறுத்திருந்து பொறுத்திருந்து கடைசியில் பணம் வீணாகிவிட்டதாகவும் கூறி சிம்புவை படத்தில் இருந்து நீக்கினார்.

அந்த படத்தை புதிய ஹீரோவை வைத்து தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். இந்த செய்தி காட்டுத் தீயாகப் பரவிய போது சிம்பு மகா மாநாடு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதுவும் இந்த படத்தை சிம்புவே இயக்க உள்ளதாகவும்,சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் இப்படம் தயாரிப்பு இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்குள் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் வெளிநாடு சென்று சென்று அங்கு புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று அண்மைகாலமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனை முடித்த கையோடு தனது உடல் எடையையும் குறைத்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

அதுவும் வித்தியாசமான கெட்டப்பில், விமான நிலையத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அதில் புதிய ஹேர்ஸ்டைல், தாடியுடன் விமான நிலையத்தில் நடந்துவரும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதோடு டுவிட்டரில் சிம்பு ரிட்டன்ஸ் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *