தல60 படத்தின் பூஜை ஆரம்பம் ஆகும் நாள்!

Spread the love

நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகள் ஒருபுறம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இதே கூட்டணி தான் தல அஜித்தின் 60வது படத்திலும் அமைந்துள்ளது. ஆகையால் படக்குழு இரண்டு வேளைகளிலும் பிசியாக இருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகளை முடித்து படத்தை படக்குழு சென்சாருக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்.

இன்னும் சில தினங்களில் சென்சார் ரிசல்ட் வெளியாகும். இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.

அதனால் தல60 படத்தின் வேலைகளை படக்குழு ஆரம்பித்திருக்கிறார்களாம். அதாவது இந்தப் படத்தின் பூஜையையும் அதற்கான திட்டத்தையும் தற்போது போட்டு வைத்துள்ளார்கள் படக்குழு. ஆனால் இந்த படத்தின் பூஜை நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸுக்கு பிறகு தான் என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *