நம்ம வீட்டு பிள்ளை: முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Spread the love

சிவகார்த்திகேயனின் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் டிவி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், உலகம் முழுவதும் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இதில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு நடிகர் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது வெளியே வரும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமா்சனத்தை கொடுத்து வருவதால், இந்த படம் மெகா ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் விடுமுறை இல்லாத வேலை நாட்களாக இருந்த போதிலும், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் இந்தப் படத்தில் இருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும், அரங்கு நிறைந்த காட்சிகளாகவே காணப்பட்டது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் 75% டிக்கெட்டுகள் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விபரம்தமிழ்நாடு: ₹ 11 கோடிகேரளா: ₹ 1.6 கோடிகர்நாடக 3.0 கோடிதெலுங்கானா & ஆபி: ₹ 1.75 கோடிவெளிநாடு: ₹ 1.35 கோடிமுதல் நாளில் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்: ₹ 18.75 கோடி.

சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது நம்ம வீட்டுப் பிள்ளை. மேலும் இப்படத்தின் பட்ஜெட் அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த வார இறுதியில் ஒரு 40 – 45 கோடி கலெக்சன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *