கவின் போ னதை கொண்டாடிய லொஸ்லியா!

Spread the love

நேற்றைய எபிசோடில் பிக்பாஸிடம் லாஸ்லியா கேட்ட ஒரு கேள்வியால் ஷெரின் ஆவேசமடைந்தார்.பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதால் பெரும் கவலையில் இருந்தார் லாஸ்லியா. கவின் போனதால் இனி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என பிக்பாஸிடம் கூறி கதறினார்.

கடந்த இரண்டு நாட்களாக சோகத்தில் மூழ்கியிருந்த லாஸ்லியா நேற்று முதல் பேக் டூ ஃபார்ம் ஆனார். நேற்றை யஎபிசோடிலேயே அவர் நார்மலானது தெரியவந்தது.

காலையிலேயே பிக்பாஸ் போட்ட வேக்அப் பாடலான என் பேரு மீனாகுமாரி பாடலுக்கு எப்போதும் போல ஆட்டம் போட்டார் லாஸ்லியா. மேலும் பழையபடி ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசி சிரித்து விளையாடினார் லாஸ்லியா.டைனிங் ஹாலில் அமர்ந்து வெண்மேகம் பாடலை பாடிக்கொண்டிருந்தனர் ஹவுஸ்மேட்ஸ். அப்போது, சைலனஸ் என்ற பிக்பாஸ், லாஸ்லியாவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார்.

பின்னர் டேபிளில் வைக்கப்பட்டிருந்த ஃபைலை எடுத்து படிக்க சொன்னார் பிக்பாஸ். அப்போது ஃபைலை எடுத்துப்பார்த்த லாஸ்லியா அதனை மனதுக்குள்ளேயே படித்தார்.இதனை கவனித்த பிக்பாஸ், என்ன லாஸ்லியா மனப்பாடம் பண்ணீட்டிங்களா லாஸ்லியா என்று கேட்டு கலாய்த்தார் பிக்பாஸ். பின்னர் சத்தமாக படியுங்கள் என்று பிக்பாஸ் கூற சத்தமாக படித்தார் லாஸ்லியா.

இதனை தொடர்ந்து ஏதாவது டவுட் இருக்கா லாஸ்லியா என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு இதில் இல்லை பிக்பாஸ் என்று லாஸ் பதிலளிக்க, நீங்க போலாம் லாஸ்லியா என்றார் பிக்பாஸ்.உடனே பிக்பாஸ் உங்கக்கிட்ட ஒன்னு கேட்கனும் பிக்பாஸ் என்ற லாஸ்லியா, என்னை பிடிக்குமா பிக் பாஸ் என பட்டென லாஸ்லியா கேட்டு விட்டார்.

லாஸ்லியாவின் கேள்விக்கு உடனே பதில் கூறாத பிக்பாஸ் சில நிமிட தாமதத்திற்கு பிறகு பிடிக்கும் என்றார். இதனை கேட்டு உச்சி குளிர்ந்து போன லாஸ்லியா, ஐ லவ் யூ பிக்பாஸ் என்று கூறிவிட்டு சிரித்தப்படியே வெளியே வந்தார்.பின்னர் சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் நடந்ததை கூறினார் லாஸ்லியா. இதனால் ஆவேசமடைந்த ஷெரின், இங்க என்ன நடக்குது பிகி பேபி என தனது ஸ்டைலில் கேட்டார்.

மேலும் கோபித்துக்கொண்டு தனியாக சென்ற ஷெரின், என்னை இப்போதே பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்க வேண்டும் என்று செல்ல சண்டை போட்டார்.இதனைத்தொடர்ந்து ஷெரின் டைனிங் டேபிளில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேமரா முன்பு சென்று காதல் பாடலை பாடிய லாஸ்லியா, இந்த பாடல் உங்களுக்குதான் பிக்பாஸ் என்றார்.இதனைக்கேட்டு கடுப்பான ஷெரின், மேக்கப் போடுவதை நிறுத்திவிட்டு பிக்பாஸ் மீது மீண்டும் செல்லமாக கோபப்பட்டார்.

ஏற்கனவே ஒரு முறை ஷெரினை கன்ஃபெஷன் ரூமில் அழைத்து பேசிய பிக்பாஸ், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஷெரின் என்றார். இந்நிலையில் பிக்பாஸ் லாஸ்லியாவை பிடிக்கும் என்று கூறியதை ஷெரினால் ஏற்க முடியவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *