தர்ஷன் எவிக்ட்டடானதுக்கு கஸ்தூரி என்ன சொன்னார் தெரியுமா !

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்3 யில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார் நடிகை கஸ்தூரி. அவரது ஒரிஜினாலிட்டி தெரிவதற்குள்ளேயே நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்த கஸ்தூரி இரண்டு வாரங்களிளேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, நிகழ்ச்சியை கடுமையாக சாடினார் கஸ்தூரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நம்முடைய உண்மை முகம் தெரியவரும் என்றார்கள், ஆனால் நிகழ்ச்சியின் உண்மை முகத்தை நான் தெரிந்து கொண்டேன் என்றார்.

மேலும் பிக்பாஸ் டைட்டிலை பெற தகுதியானவர் சேரன் மட்டும்தான் என்றும் கூறினார் கஸ்தூரி. ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டார். இதனை அறிந்த கஸ்தூரி, பிக்பாஸ் நிகழ்ச்சியை எச்ச என திட்டினார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்ட கஸ்தூரி, இந்த தகவல் உண்மையா என தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். மேலும் இந்த தகவலை கேட்டு சோகமாகிறேன் ஆனால் ஆச்சரியப்படவில்லை என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது செம காண்டில் உள்ளார் கஸ்தூரி. பிக்பாஸ் வீட்டில் சேரன், மதுமிதாவுக்கு பிறகு முகென் தர்ஷன் ஓரளவுக்கு நேர்மையாக இருப்பதாக தெரிந்தது. இதில் முகென் ஏற்கனவே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார்.

இதனால் அவர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறவில்லை. கவினும் சாண்டியும் அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்து குளிர் காய்ந்தனர். லாஸ்லியா, வந்த வேலையை விட்டுவிட்டு கவினுடன் காதல் கடலை என்பதையே முழு நேர பணியாக செய்தார்.

சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினை காதலித்து, அவரையும் காதலிக்க வைத்தார். அதோடு யாரையும் மதிக்காமல் ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினார் லாஸ்லியா. கமல் முன்னால் கால் மேல் கால் போட்டு ஆட்டிக்கொண்டு தனது முழு திமிரையும் காட்டினார் லாஸ்லியா. இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.

அடுத்து ஷெரின், மதுமிதா வெளியேற முக்கிய காரணமாய் இருந்தவர் என்று கூறப்பட்டது. அவரும் தர்ஷனை காதலிப்பதாக வனிதாவிடம் கூறிவிட்டு பின்னர் இல்லை என நாடகமாடினார். இவர்கள்தான் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் எஞ்சியிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *