இந்த ஆறு ராசிக்காரர்களிடம் கொஞ்சமில்லை ரொம்ப ஆபத்தனாவர்களாம் பாத்து இருங்க!

Spread the love

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குள்ளும் ஒவ்வொரு குணம் இருக்கும்.

அந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இவ்வாறு கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் நேர்மையைப் பற்றி அவர்களுடன் இருப்பவர்கள் நன்றாகவே அறிவார்கள். எனவே உண்மையான விமர்சனத்திற்கு எப்போதும் இவர்களை அணுகலாம்.

இவர்கள் எப்போதும் உண்மையைக் கூறுவார்கள், எப்போதாவது பொய்யைக் கூறுவார்கள், ஆனால் உண்மையைக் கூறவேண்டும் என்று இவர்கள் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.

இதனால் மற்றவர்கள் உணர்ச்சிரீதியாக எவ்வளவு துன்புற்றாலும் அதனைப் பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் இருந்து நீங்கள் கண்டிப்பாக உண்மையைப் பெறுவீர்கள். எந்தவொரு விஷயத்திலும் எது நல்லது, கெட்டது என்று தெரிந்து கொள்ள நீங்கள் எந்த தயக்கமும் இன்றி ரிஷப ராசிக்காரர்களை அணுகலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் பொய்களை நம்பமாட்டார்கள் அதேபோல இவர்கள் போலியான அணுகுமுறைகளையும் நம்பமாட்டார்கள்.

நீங்கள் கேட்க விரும்பாத உண்மைகளை கூட இவர்கள் கூறுவார்கள், அதனால் நீங்கள் அழுதாலும் கவலைப்படமாட்டார்கள். இரக்கமில்லாமல் இவர்களின் நேர்மையை காட்டுவார்கள்.

மிதுனம்
ராசிகளிலேயே இரக்கமில்லாமல் உண்மையைக் கூறும் ராசி இவர்கள்தான். இவர்கள் உங்களிடம் உண்மையைக் கூற நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் அவர்கள் தங்கள் மௌனம் கலைத்து உங்களிடம் உண்மையை கூறும் போது கண்டிப்பாக உங்களை காயப்படுத்துவார்கள்.

இவர்களின் நேர்மை மற்றவர்களை காயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் இவர்கள் நேர்மையாக இருப்பதே மற்றவர்களை காயப்படுத்துவதற்காகத்தான்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நீங்கள் கேட்க விரும்பாவிட்டாலும் இவர்களாகவே உங்களிடம் உண்மையைக் கூறுவார்கள்.

அவர்கள் இதை வேண்டுமென்றே செய்வதில்லை மாறாக தங்கள் நேர்மையை நிரூபிக்க செய்கிறார்கள்.

இவர்களை பொறுத்த வரையில் இவ்வாறு உங்களை காயப்படுத்தும் உண்மையைக் கூறுவதை உங்களுக்கு செய்யும் உதவி என்றும், உங்களுக்கு வெளிச்சத்தின் பாதையை காட்டுவது என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால் இது உங்களை காயப்படுத்தும் என்றாலும் அவர்கள் உங்களை விரட்டி விரட்டி வந்து சொல்வார்கள், இது உண்மையில் மோசமான செயலாகும்.

கன்னி
இவர்கள் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள், கண்டிப்பாக நேர்மையாக இருக்கிறேன் என்று இரக்கமில்லாமல் நடந்து கொள்வார்கள்.

அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் அதனை ஒப்புக்கொள்ளும் வரை உங்களை விடாமல் திரும்ப திரும்ப உண்மையைக் கூறுகிறேன் என்று உங்களை தொந்தரவு செய்வார்கள்.

இவர்கள் ஒருபோதும் பேச்சை குறைத்துக் கொள்ள மாட்டார்கள், நீங்கள் நேரில் இல்லையென்றாலும் உங்களிடம் எந்த வழியிலாவது உண்மையைக் கூறிவிடுவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மையின் உச்சத்தில் இருப்பார்கள், ஆனால் அது மென்மையானதாக இருக்கும் என்று நீங்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கக்கூடாது. மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக உண்மையை மென்மையாக்குவதை இவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.

உண்மையை சொல்வதால் மோதலே வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இவர்கள் கடுமையாக பேசுவார்கள்.

உண்மை என்னவென்றால், இவர்களுக்கு உண்மையை மறைத்து பேசுவதற்கு நேரமும் இல்லை அதில் விருப்பமும் இல்லை.

கலப்படமில்லாத உண்மையை பெற விரும்பினால் நீங்கள் நேரடியாக செல்ல வேண்டியது மகர ராசிக்காரர்களிடம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *